ஞாயிறு, 8 டிசம்பர், 2024

இவ்விடம்
விட்டு நீங்க இயலவில்லை
குகைச்‌ சுவரில்
நாகம் நெளிந்து
பதிந்த தடத்தையே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பசி திறந்துகொண்டது
யுகம்‌‌யுகமாய்
ஒரு காலத்தில்
கடலிருந்து
நீர் அலம்பிய இடங்களை
வருடி நோக்குகிறேன்
வானின் கரம்
எரிகல் கொண்டு
ஏற்ற சுடரென
ஒளிர்ந்தது கானுக்குள்
குகையின் சுவருக்குள்
செவி வைத்தபோது
கானுடன் வானுடன்
காலத்துடன்
அது பேசும் சொல்லை
கேட்டுக்கொண்டது
குகையளவே தொன்மையான
ஒன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?