வனம் சமரின் வெளி
கூர் வேட்டைக் கண்கள்காத்துள்ளன
இரைக்கு
மிறளும் கண்கள்
செவி மடுக்கின்றன
தன்னை அணுகும்
பசியின் தடமறிய
ஆனால்
தெய்வமொன்றின்
ஓயா தவம் கனிந்து
மலர்கிறது ஒரு மலர்
வனதேவதை சொன்னது
'மலரைப்பாடு
வனத்தின் புத்தன் அது'
இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும் பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்கொண்டுவிட்ட அகத்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக