இத்தனை தூரம் பயணித்தது
இத்தனை வெற்றிகள் ஈட்டியதுஇத்தனை வாதங்கள் புரிந்தது
புண்பட்டது
புண்படுத்தியது
இத்தனை சொற்களை வடித்தது
வண்ண வண்ணமாய் நடித்தது
எல்லாம்எல்லாம்
நான் நான் நான் என
உரக்கக் கூவத்தானா
இந்த நள்ளிரவில்
தொண்டை நரம்புகள் புடைக்க
நான் எழுப்பும் குரலுக்கு
தெருநாய் ஒன்று
ஓட்டத்தை சற்றே நிறுத்தி நோக்கி
பின் அதன்பாடுக்கு சென்றது
வேறெந்த சலனமும் இல்லை
இக்கணத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும்
இம்மாபெரும் இரவில்
No comments:
Post a Comment