செல்லமுடியா
தூரமென்றில்லைஅன்பின்
கோர்த்த கைகள்
அப்படியே நீடிக்கமுடியாமை
குறித்த தர்க்கங்கள்
சதா ஒலித்துக்கொண்டே இருக்கும்
நகருக்குள்
செல்ல விருப்பமில்லை
வானின் புகைக்கரம்
நீண்டு பனியாகி கவிழும்
இவ்வனத்தினுள்
நாம் வாழ
ஒரு சிற்றகல் போதும்
பூமியின் முதல் அகல்
மலர்ந்ததிலிருந்தே
அகலின் நீண்ட நெடும் வரிசை
சொல்லிக்கொண்டிருக்கிறது
அன்பின் தர்க்கத்தை
No comments:
Post a Comment