இன்று
பறவையொலியின்றிமழையொலியில் கண்விழித்தேன்
புலரி தன் ஒளியெல்லாம்
அடங்கி கூடொடுங்கியிருந்தது
கதவிடுக்குவழி
வானம் குடிலுக்குள்
எட்டிப்பார்த்திருந்தது
எல்லா பொழுதுக்கும்
ஒரே அகலை ஏற்றிவிட்டு
ஒரே ஒளியில்
ஒரே ஒலியில்
பொழுது கரைவதை
பார்த்துக்கொண்டிருந்தேன்
No comments:
Post a Comment