இப்பெருக்கு
எப்போதுஓயப்போகிறது
ஒரு இடறலில்
வானம் எப்படி
திறந்துகொண்டது
ஒரு பறவையின்
அந்திச்சொல்லுக்கு
கானகம் எப்படி
சிலிர்த்துக்கொண்டது
கடல் கிடக்கும்
பெருமீன் ஒன்றின்
சோகத்திற்கு
வானம் எப்படி உடைந்தது
ஆதியில்
சுடர் எங்ஙனம்
ஒளிரத்துவங்கியது
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக