புதன், 4 டிசம்பர், 2024

ஒரு நாள்

தன் விருட்சங்களுடனும்
பறவைகளுடனும்
பெருகும் ஒளி இருளுடனும்
வான் நட்சத்திரங்களுடனும்
தலும்பும் கடல்களுடனும்
மிக‌ மெல்லிதாய் ஓடிக்கொண்டிருக்கும்
பொழுதுகளுடனும்
ஒரு சுழல் நடனத்தைப்
புரிந்துகொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?