கோப்பில்
கையெழுத்திடும்போதும்பால்கணக்கை
காலன்டரில் எழுதும்போதும்
நாயை தலைதடுவும்போதும்
பைக்கின் கிக்கரை
உதைக்கும்போதும்
ஒரு செல்ஃபிக்கு
முகம் காட்டும்போதும்
கடையில் கூகுள் பே
செய்யும்போதும்
ரயிலுக்குக் காத்திருக்கும்போதும்
நீ என்னுடனேயே இருந்ததை
உணரவேயில்லை
அதிவேக ரயில் பேரோலமாய்
கடக்கும் திடுக்கிடலில்
அவ்வளவு சன்னமாய் கேட்கிறது
ஆழத்து விருட்சங்களில் உரையும்
உன் பறவைக்குரல்கள்
No comments:
Post a Comment