ஆனால் அத்தனையும்
அழகாக மிளிரும்
மலரைக் கட்டி சரமாக்குவதான
நடனமொன்றை
நிகழ்த்திக்கொண்டிருக்கிறாய்
பித்தனால் தாள முடியவில்லை
ஒரு அதிகாலையை
அதன் நிறப்பெருக்கை
ஒவ்வொரு மலராகக் கோர்க்கும்
ஒளிக்கரங்களைக்
காணக் காண
இந்த அறைக்குள்
இத்தனை மெல்லிய
உன் விரலின் அழகை
பாடுகையில்
அவ்வொளிக்கரங்களை
பாடுபவனாக ஆகிறேனா?
சிறிவற்றை மாபெரும் சுழற்சியில்
கோர்க்கும் மாயம்
நிகழ்ந்துகொண்டே இருக்கிறது
குடத்தினுள் அமர்ந்து
வந்துவிடுகிறது மகாநதி
இச்சிறு இல்லத்தினுள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக