1
விரித்த படத்தில்
நிலவொளிரபிளந்த நா நீட்டி
நஞ்சின் தேவனே
எதை அழைக்கிறாய்
யுகம் யுகமாய்
...............
2
காலத்தின்
பிலத்தில்
குவிந்த விஷத்தை
துடித்துத்தீண்டி
பாய்ச்சு என்னுள்
நீலம் பாவுவதற்குள்
சென்றுவிடவேண்டும்
துன்னிருளின் வனங்களுள்
பிலத்தில்
குவிந்த விஷத்தை
துடித்துத்தீண்டி
பாய்ச்சு என்னுள்
நீலம் பாவுவதற்குள்
சென்றுவிடவேண்டும்
துன்னிருளின் வனங்களுள்
..............
3
வனத்தின்
ஆழத்திலிருந்து
என் கனவுக்குள்
நீ வந்ததன்
மாயம் என்ன?
நஞ்சில் மாயங்கள்
இல்லை
அவை நாளங்களிளேறி
பறித்துச் செல்வதை
சிறு அலுங்கலுமில்லாமல்
செய்கின்றன
என்கிறான்
தீண்டுதல் அறிந்தவன்
ஆழத்திலிருந்து
என் கனவுக்குள்
நீ வந்ததன்
மாயம் என்ன?
நஞ்சில் மாயங்கள்
இல்லை
அவை நாளங்களிளேறி
பறித்துச் செல்வதை
சிறு அலுங்கலுமில்லாமல்
செய்கின்றன
என்கிறான்
தீண்டுதல் அறிந்தவன்
.....................
4
வளைந்தெழுந்து
நிற்கிறாய்
உன் செதில்களில்
நிலவு ஒளிர்கிறது
பத்தி ஒடுக்கி
காலத்துள் சுருளவிழ்த்து
நீண்டு நீண்டு வா
சரண்கொள்கிறேன்
அருளட்டும்
உன் கொடும்பற்கள்
பறத்தலை
இக்கூண்டிருலிருந்து
நிற்கிறாய்
உன் செதில்களில்
நிலவு ஒளிர்கிறது
பத்தி ஒடுக்கி
காலத்துள் சுருளவிழ்த்து
நீண்டு நீண்டு வா
சரண்கொள்கிறேன்
அருளட்டும்
உன் கொடும்பற்கள்
பறத்தலை
இக்கூண்டிருலிருந்து
.......................
5
இத்தொல்
நிலமெங்கும்
கோயில் கொண்டுள்ள
நீ
ஏழேழு
பிறவியாய்
தொடர்கிறாய்
இவ்விரவில்
எல்லாம் புலனாகிவிட
வந்துகொண்டிருக்கிறேன்
உன் கொடும் விஷத்தின்
ஒரு துளி அருந்த
நிலமெங்கும்
கோயில் கொண்டுள்ள
நீ
ஏழேழு
பிறவியாய்
தொடர்கிறாய்
இவ்விரவில்
எல்லாம் புலனாகிவிட
வந்துகொண்டிருக்கிறேன்
உன் கொடும் விஷத்தின்
ஒரு துளி அருந்த
........................
6
பல் படிந்த
தடத்தில்
ஒரு மலர்
பூக்கும் வரை
ஏழேழு
பிறவிகளுக்கு
கொல்லட்டும்
உன் விஷம்
தடத்தில்
ஒரு மலர்
பூக்கும் வரை
ஏழேழு
பிறவிகளுக்கு
கொல்லட்டும்
உன் விஷம்
....................
7
காலம் சுழிக்கையில்
பத்தி விரித்து
நிற்கிறாய்
விட ஸ்வரூபமே
உன் பிடரியில்
ஓவியமிட்ட கைகள்
யாருடையது
பத்தி விரித்து
நிற்கிறாய்
விட ஸ்வரூபமே
உன் பிடரியில்
ஓவியமிட்ட கைகள்
யாருடையது
.....................
8
நஞ்சின் துடி
ஒலிக்கா
இடமுண்டா
நெளியும் விட ரூபமே
உன் பல் தீண்டா
தடமுண்டா
இப்பெருவனத்தில்
ஒலிக்கா
இடமுண்டா
நெளியும் விட ரூபமே
உன் பல் தீண்டா
தடமுண்டா
இப்பெருவனத்தில்
....................
9
அமிர்தம்
எழம்முன்
எழட்டும்
உன் ஆலகாலம்
எழம்முன்
எழட்டும்
உன் ஆலகாலம்
..................
10
உறக்கமில்லை
என் நாளங்களில்
எழுந்துவிட்டது
உன் நெளிவு
காலங்களுக்கு
அப்பாலிருந்து
அசைக்கிறாய்
இச்சிறு தோற்பையை
என் நாளங்களில்
எழுந்துவிட்டது
உன் நெளிவு
காலங்களுக்கு
அப்பாலிருந்து
அசைக்கிறாய்
இச்சிறு தோற்பையை
.................
11
உன்
நஞ்சின் துளித்தீ
என் நாளங்களை
பற்றி எரியச் செய்துவிட்டது
திசையறியா
இச்சிற்றுயிரை
சுடலைச் சாம்பலில்
சேர்த்தாய்
நீ வாழ்க
நஞ்சின் துளித்தீ
என் நாளங்களை
பற்றி எரியச் செய்துவிட்டது
திசையறியா
இச்சிற்றுயிரை
சுடலைச் சாம்பலில்
சேர்த்தாய்
நீ வாழ்க
.................
12
கயிற்றை நீயெனக்கொண்டு
அஞ்சியே
ஏழு பிறவி கழிந்தனவே
இதோ
உன்னை நேர்கொண்டு
முழுதளித்தேன்
கருணையில்லாத் தேவனே
உன் துளிக் கருணை
அழிக்கட்டும்
இத்தொல் மிருகத்தை
அஞ்சியே
ஏழு பிறவி கழிந்தனவே
இதோ
உன்னை நேர்கொண்டு
முழுதளித்தேன்
கருணையில்லாத் தேவனே
உன் துளிக் கருணை
அழிக்கட்டும்
இத்தொல் மிருகத்தை
...............
13
நோய்ப்படுக்கை
நீங்கி
உன் சரசரப்பின்
தடமறிந்து
இத்தனை தூரம் வந்துள்ளேன்
இத்தனை யுகமாய்
தேக்கிய என் விஷம் முறிக்கத்தான்
வேண்டுகிறேன்
அல்லல் அறுத்துத் தீண்டு
நீங்கி
உன் சரசரப்பின்
தடமறிந்து
இத்தனை தூரம் வந்துள்ளேன்
இத்தனை யுகமாய்
தேக்கிய என் விஷம் முறிக்கத்தான்
வேண்டுகிறேன்
அல்லல் அறுத்துத் தீண்டு
..............
14
இக்கணம்
நீ எவ்விதமுள்ளாய்
நான் வேண்டும்
அருளின் துளி
ஏந்தி கானுக்குள்
எக்காலத்துளையுள்
சுருள்கொண்டுள்ளாய்
அறிவேன்
இப்பிறவிக்கு
அருளப்பட்டது
ஆலகாலத்தின் துளி
நீ எவ்விதமுள்ளாய்
நான் வேண்டும்
அருளின் துளி
ஏந்தி கானுக்குள்
எக்காலத்துளையுள்
சுருள்கொண்டுள்ளாய்
அறிவேன்
இப்பிறவிக்கு
அருளப்பட்டது
ஆலகாலத்தின் துளி
................
15
அரவு சூடி
சுடலையாடும்
கூத்தனின்
பல கோடிக் கண்களில்
ஒன்று நோக்குகிறது
கண்டம் தேங்கியது
வெள்ளமெனப் பாயட்டும்
இப்புன்னடலெங்கும்
சுடலையாடும்
கூத்தனின்
பல கோடிக் கண்களில்
ஒன்று நோக்குகிறது
கண்டம் தேங்கியது
வெள்ளமெனப் பாயட்டும்
இப்புன்னடலெங்கும்
............
16
ஐம்புலன்
கொண்ட பிண்டத்தின்
அழல் போக்கவே
கொண்டாய் ஐந்து தலை
கொன்றழி
எஞ்சும் ஆசை துளியில்லை
கொண்ட பிண்டத்தின்
அழல் போக்கவே
கொண்டாய் ஐந்து தலை
கொன்றழி
எஞ்சும் ஆசை துளியில்லை
............
17
உன் இருப்புணராத
கணமில்லை
மின்னலின்துடி ஒலிக்கும்
உன் இரு கூர்நாவின்
அழைப்பில்தான்
திசையறிந்துப்பின்
உன் வனம்சேர்ந்தேன்
மின்னலின்துடி ஒலிக்கும்
உன் இரு கூர்நாவின்
அழைப்பில்தான்
திசையறிந்துப்பின்
உன் வனம்சேர்ந்தேன்
............
18
இப்பொய் அழிக்க
ஆகும்
உன் விடத்தால்
மட்டும்
ஆகும்
உன் விடத்தால்
மட்டும்
..........
19
விடம் சீறும் திசை தேர்ந்து
வந்துகொண்டிருக்கிறேன்
அகாலத்தில் வால்கிடக்க
காலத்தில் கூர் இரு நா பறக்க
நீ கிடக்கும்
பிலத்துக்கு
வந்துகொண்டிருக்கிறேன்
அகாலத்தில் வால்கிடக்க
காலத்தில் கூர் இரு நா பறக்க
நீ கிடக்கும்
பிலத்துக்கு
.............
20
உறக்கமில்லை
என் நாளங்களில்
எழுந்துவிட்டது
உன் நெளிவு
காலங்களுக்கு
அப்பாலிருந்து
அசைக்கிறாய்
இச்சிறு தோற்பையை
என் நாளங்களில்
எழுந்துவிட்டது
உன் நெளிவு
காலங்களுக்கு
அப்பாலிருந்து
அசைக்கிறாய்
இச்சிறு தோற்பையை
.............
21
இலையெல்லாம்
உன் பத்தி
நீரின் சாட்டம்
உன் வழிவு
கிடக்கும்
வெளி துழவும் கிளை
உன் நெளிவுடல்
வெட்டும் மின்னல் கணம்
ஒளிர்கிறது மண்ணோக்கும்
கொடும்கண்
சூரியன் முன்னெழுந்து
விழுங்கினாய் எரிப்பந்ததை
உன் இருள் நிலமெங்கும்
தகிக்கும் விடம் இச்சதுப்பெல்லாம்
...............
22
அகாலத்தில் சுருள்கொண்டுள்ளாய்
அடிமுடியற்ற அகாதத்தில்
எது அசைந்தது
அசைவித்தது எது
ஒரே கணத்தில்
அகாலமசைந்து காலமானதும்
நீ நா துடிக்க எழுந்ததும்
பல கோடி நாகம் ஈந்தாய்
எம் வனமெல்லாம் நிறைக்க
..................
23
நீ
நஞ்சின் மலர்
அலையாடும்
கடல் இரவுகளில்
ஒளிர்வது
நின் நஞ்சு
மலையின்
ஊழ்கத்தில்
எழுவது
அமிர்தம் மட்டுமல்ல
..............
No comments:
Post a Comment