மேலுள்ளது மிக்கலாங்கலோவின் ஓவியம், வாட்டிக்கன் ஸிஸ்டின் சாபலின் கூரையில் உள்ளது. டாவின்சி கோட் படத்தில் இந்த சாப்பல் காட்டப்படும்.
பதினாறாம் நூற்றாண்டின் மாபெரும்கலைஞன். இவ்வோவியத்தில் உள்ளது, ஆதாமுக்கு கடவுள் உயிர் கொடுக்கும் தருணம். உயிர் கொடுத்த பின்பான அடுத்த நொடி. படைப்பை உருவாக்கியபின் நிகழும் ஒரு விலகல் என்று கூட தோன்றும். படைப்புக்காக படைப்பாளி வேறொன்றாக மாறி பின் தானாக மாறும் ஒரு கணம். படைப்பு வேறொன்றாக தனித்து நிற்கிறது.
ஆதாம் இப்புள்ளியிலிருந்து ஏதேன் தோட்டத்தில் அலைகிறான். ஏவாளை அறிவுக்கனியை சுவைக்கும் படி பாம்பொன்று தூண்டுகிறது. ஆச்சர்யம் என்னவெனில் உலகம் முழுவதும் கடவுள்படைப்புதான். அப்பாம்பும் கனியும் கூட கடவுள் படைப்புதான். அக்கனியை உண்டதும் தங்கள் நிர்வாணத்தை உணர்ந்து இலைகளால் தங்களை உடலை மறைத்துக்கொள்கிறார்கள் (ரொம்பவும் ஆழமான தருணம் இது). அறிவுக் கனியை சுவைத்ததற்காக ஏதேன் தோட்டத் தி லிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்... பின் வரும்ஓவியம் வெளியேற்றத்தை காண்பிக்கிறது. வலியிம் வேதனையும் அவமானமும்....
பின் ஒட்டு மொத்த மானுடமும்பெருகுகிறது. வஞ்சமும் பாவமும் சுமந்த மனிதர்களை கடவுள்கோபம் கொண்டு ஒரு முறை நீர் பிரளயத்தை உருவாக்கி அழித்து, ஆப்ரகாம் என்பவனை மட்டும் மீட்டெடுத்து பெருகச் செய்கிறார். ஆப்ரகாமின் குடும்பம் அளித்த உணவை ஒரு முறை முகர்கிறார் கடவுள். அதில் எதை உணர்ந்தார்? வஞ்சம் பழி பொறாமை, இவற்றுக்கிடையில் அன்பு? மானுடத்தை கைவிட்டார் கடவுள்.
இத்தனைக்குமான துவக்கம் மிக்கலாஞ்சலோ வின் அவ்வோவியத்தில் இருக்கும் ஒரு கணம்...
ஆதாம் தன்னை இயக்கும் சக்திகளின் முன் ஒப்புக்கொடுத்தவனாக, தன்னை இயக்கும் சக்திகளைப் பற்றி அறியாத குழந்தையாகக் கிடக்கிறான். கடவுளின் முகத்தில் படைப்பை நோக்கும் Inquisitiveness இருப்பதாகத் தோன்றுகிறது. உருவாகி நிற்பதை நோக்கும் குழப்பம் என்றும் தோன்றுகிறது. வருவது அறிந்ததால் கனிவும் கூட என்று தோன்றுகிறது. ஆதாமின் முகத்தில் ஏதுமறியாதவனின் பாவனை - ஆம் ஏதுமறியாதவர்கள்தான் நாம்.
இது இன்று ஜெயமோகன் தளத்தில் வெளியான ஒரு கட்டுரையின் முகப்படம். அதாமின் உடலைப் பார் - சுற்றிலும் ட்ரிங்க்ஸ், பர்கர் பெட்டி, கையில் டீவி ரிமோட், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸை நுகர்வுக் கடவுள் கொடுக்கிறார். ஆதாமின் முகம் உணர்வற்றதாக இருக்கிறது, காலத்தைப் பற்றி ஏதுமறியாதவனாக கொடுக்கப்படுவதை, திணிக்கப்படுவதை நோக்கி கை நீட்டுகிறான். ஆனால் மெக்டி கடவுளின் முகத்தில் தவழ்வது ஒரு 'vicious smile'.
No comments:
Post a Comment