வியாழன், 7 மே, 2026

நீ ஏற்றிய அகலில்
அதன் செதில் ஒளிர்கிறது
ஒரு நாள்
நீ இட்ட கோலத்தில்
கோடுகளோடு வளைந்து
கிடந்தது
இமையாக் கண்களும்
ஓயா துடிநாவும்
என்‌ கனவுள்
வந்துவிட்டது
எத்தனை நஞ்சென்றறியேன்
அன்பே
நீ ஆசையாய் வளர்க்கும்
சிறு மலரின் தேன் துளி
விஷமுறிக்கும்தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...