கிளை அலுங்கவில்லை
நீங்கும் சிறு குருவியின்இறகு பட்டு
இலையொன்று நலுங்கியது விட்டு
வேறெந்த அசைவுமில்லை
அத்தனை மென்மையில்தான்
துளி மகரந்தம்
சிறகு கொண்டெழுந்தது
மெல்லிய பறவையொலிக்கிடையில்
வானத்தில்
விருட்சங்கள் பறக்கின்றன
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக