அலை பின்வாங்கியபின்
நீர்மை பின் வாங்குவதைக் கண்டென்வழிந்து செல்லும் நீர்
மணலில் சிறுகோடுகளால்
கோலமொன்று இட்டிருக்கக்
கண்டேன்
அலைசென்றபின்னான
நீர்மையில்
சிவந்த வான் தீற்றலாய்
விழக் கண்டேன்
நண்டுகளிட்ட துளையை
அலைமூடி சிறுதுளையாக்கக் கண்டேன்
நிலவின் நிறத்தில்
மகவின் உள்ளங்கையளவு நண்டொன்று
எட்டுக் காலகள்
இரண்டு கைகள்
இரண்டு கொம்புகள்
கைகளால் மணற்துகளை அள்ளி
உண்ணக் கண்டேன்
இப்படித்தான் கண்டேன்
பெரிதினும் பெரிதானவை
சிறிதினும் சிறிதாய்
ஆடல் கொள்வதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக