புதன், 13 மே, 2026

இனிமைப் பட்டாவளி

இந்த பொன்னொளிர்
காலை இனிமையானது
உணவு இனிமை
உடலில் இனிமை
மனிதர்களில் இனிமை
காமம்‌ இனிமையுடைத்து
உழைப்பு இனிமை
சிறு ஆசைகள் இனிமை
ஆசைகள் பிறப்பிக்கும்
பேரங்கள் இனிமை
விலகுதலில் இனிமை
சேர்தலில் இனிமை
உன் குதிங்கால் வெண்மை
அரற்றும் கொலுசுக்கு
திரும்புதல் இனிமை
வான்சுடர் அணையும் பொழுது
இனிமை
இல்லத்தை மென்போர்வையாய்
அணைக்கும்‌ அகல்சுடரொளி
இனிமை
மாலையை நீண்ட ஒரு கோடாக்கிக்
கடக்கும்‌‌கிளிச்சத்தம் இனிமை
இருத்தல் இ னி மை
இச்சொல்லின் ஒவ்வொரு
பதத்தையும் அறிந்துதான்
சொல்கிறோம் யாம்
பேரினிமையின் பெருங்கடலாய்
ததும்பும் பெருங்காலமருளிய
இச்சிறுவாழ்வு இனிமையுடைத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...