சனி, 9 மே, 2026

ஒரு மௌனமோ
கனிதலோ
நிகழாத நாள்
கண்ணீரோ
ஒரு தொடுகையோ
நிகழாத நாள்
மலரைக் காணுதலோ
மழையில் பூரித்தலோ
நிகழாத நாள்
இந்நாளை
ஒரு‌‌ நிகழாத நாளாக
ஆக்கமுடியாது
அதன் நிகழ்வுகளை
மாற்றவும் முடியாது
காலத்தை அவ்விதமாக
இந்நாளில் நம் ஒரு நாள்
சந்திக்கையில்
ஒரு பாறையைப்போல்
கிடக்கும் நாளில்
வெறுமனே வருகைக் கையெழுத்திட்டு
இல்லம் திரும்புங்கள்
பேரேடு
நிகழும் நாளுக்கான கையெழுத்தையும்
நிகழா நாளுக்கான‌ கையெழுத்தையும்
ஒன்றே போல் ஏந்தியுள்ளதை
நம் மனம்‌ ஒரு போதும்
ஏற்கப்போவதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...