ஞாயிறு, 10 மே, 2026

பேரம்

நீரின் மேலெழுந்து
பெருமீனாய் குதிப்பதற்குள்
உன் கிரணத்தின் சுடர்நீராடல்
கண்ட கணம்
நீரின் கடும் ஆழம்‌ நோக்கி
இழுத்துச்செல்லப்படுகிறேன்

ஒரு மலர் கண் விழித்து
கனிந்து நோக்கும்‌போது
மும்முரமமாய் அதன் மூடிய கண்களை
வரைந்துகொண்டிருக்கிறேன்

சொல்லை அருந்தியானபின்
மௌனம்‌ திரண்டு நிற்கும்
கோப்பையை
கைவிடுகிறேன்

சுட்டும்‌ திசையைவிட்டு
சுட்டும் விரலை எட்டிப்பிடிக்கிறேன்

வனத்தின் ஆழம் தவிர்த்து
ஆழம்‌ சுட்டும் அத்தனை சாதனங்களையும்
திரட்டி வருகிறேன்

சேர்த்த காசுகளை எண்ணிக்கொண்டு
பெருலாபத்தின் கனவுகளுடன்
வணிகனாய்
என் பேரங்களை துவங்கிவிட்டிருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேரம்

நீரின் மேலெழுந்து பெருமீனாய் குதிப்பதற்குள் உன் கிரணத்தின் சுடர்நீராடல் கண்ட கணம் நீரின் கடும் ஆழம்‌ நோக்கி இழுத்துச்செல்லப்படுகிறேன் ...