நகரம் உயிர் நீங்கும்
விலங்கைபோல் உச்ச விசையில்துடித்துக்கொண்டே இருந்தது
பெருஞ்சாலையெங்கும்
கிளையும்இலையும் சேறுமாய்
அடித்துச்செல்லும் வெல்லம்போல்
இறுகப்பற்றிய
மக்கள் ஊர்ந்துகொண்டிருந்தார்கள்
ஒளி மங்கிய இடங்களில்
பேரங்களும்
இருள் அடர்ந்த மூலைகளில்
இச்சைகளுமாய்
பொருள்படுவது பொருளென்று
மட்டும் ஆகிவிட்ட
இப்பெருநகரின் மேல்
அத்தனைக் கருணையுடன்
ஒரு வலசைப்புற்கூட்டம்
கடந்து செல்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக