வெள்ளி, 8 மே, 2026

இன்று மாலை
வானம் மஞ்சளாய் இருந்ததும்
மேற்கில்‌ நெருப்பின்
பிழம்பாய் கொதித்ததையும்
வரிசைக்கட்டி வானில் நடந்த
பறவைகளையும்
யாரும் பார்க்கவில்லை
சொல்லாமல் கொல்லாமல்
கண்வழி உள் நுழைந்த
இம்மாலையை
வாவென்று சொல்ல நாவெழாமல்
நின்றிருந்தேன்
விடைபெற்றபோது
மேற்கும் அறியாமல்
புள்ளும் அறியாமல்
ஏன் மஞ்சளும் கூட அறியாமல்
துளி எடுத்து
சிற்றகலில்
என் சிற்றில்லில்
சுடராய் வரைந்துகொண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...