திங்கள், 4 மே, 2026

இலையோ மலரோ
உதிர்ந்துதானே போகிறது
உதிர்வதற்குள் பறக்க வேண்டும்
எரியும் நட்சத்திரங்களும்
பெரும்புயல் வீசும் கிரகங்களும்
உலவும்
அம்மோனப்பெருவெளிக்குள்
பறக்க வேண்டும்
சிறகென்பது
இச்சிறுகூட்டை வானங்களுக்குள்
திறந்துவிட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...