வியாழன், 7 மே, 2026

வனமெங்கும்  நிறைந்த
வசந்ததின் மலர்களாய் நின்றது
மென்மையாய் மிதந்து வந்து
நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது
அசையா வேர்களில்
தியானித்திருந்தது
வான்தொட எழுந்த
பெருவிருட்சத்தில்
நடனமாய் இருந்தது
பொழுதணையும் வேளையில்
நாளெல்லாம்‌வெட்டிய
விறகுகளை சேர்த்துக்கட்டி
பரிசலில் நதி கடக்க
இருளில் இருளாய்
காட்சியானது வேழம்
வனமென ஆகிவந்த
துளியாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...