உன்னிடம் சொல்வதற்கு
எதுவுமில்லைகண்ணே
நீரின் மென்னலைவட்டம்போல்
விரிந்து கொண்டிருக்கும்
என் சிறுகாலங்களில்
அடைந்த தெளிவென்பது
ஏதுமில்லை
சொற்களுடன் சரசமாடும் மனதில்
கல்தோற்றம் கொண்ட சீலைகளாய்
சொற்பெருஞ்சுவரும்
அதில்
யாரோ தீட்டிவிடும் ஓவியங்களும்
என் வசமுண்டு
வலசைப்புள் கண்டு
மெய்கலங்கும் உயிராய்
சிறிது காலம் அது
உன்னை வைத்திருக்கக்கூடும்
ஆனால்
உறுதியானதும்
மறுக்கமுடியாததும்
காலத்தை தாங்கி நிற்பதும்
காலத்தின் தயையால் வந்ததுமான
உன்னிடம் சொல்வதற்கு
மறுக்கமுடியாததும்
காலத்தை தாங்கி நிற்பதும்
காலத்தின் தயையால் வந்ததுமான
உன்னிடம் சொல்வதற்கு
நாம் உச்சாடனம் செய்வதற்கு
என்னிடம் உன்னிடம்
இருப்பதுமான
உடல் உள்ளது
கல்லைக் கொடுக்கிறேன்
அதைப்பெருக்கிய நதியை
கண்டுகொள்
இருப்பதுமான
உடல் உள்ளது
கல்லைக் கொடுக்கிறேன்
அதைப்பெருக்கிய நதியை
கண்டுகொள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக