ஞாயிறு, 12 ஜனவரி, 2025

வேட்டல்

வயலெல்லாம்
உயிர்பெருகிக்கொண்டிருக்க
கயிற்றுக்கட்டிலில்
அம்மையை
காத்து ரட்சிக்கச்சொல்லி
மல்லாந்துவிட்டார்
புள்ளினம் போடும்
சப்தம்
ஆழக் கிரங்குபவரை
ஒன்றும் செய்யவில்லை
தென்னையின் புன்னையின்
ஆலத்தின் இலைச் சத்தத்தை
அணில் போடும் கீச்சை
அல்லிக்குளம் கேட்டுக்கொண்டது
அத்தனை தூரம்
பயணித்து வந்த
கதிர்
இத்தனைக்காலம்
நின்று பூத்த மரத்தின்
மூன்றாம் கிளையின்
நூற்றியெட்டாவது இலையிடுக்குவழி
முகம் விழந்து கலைக்க
தென்னாடுடையான் நாமம்
ஒலிக்க எழுந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?