வியாழன், 9 ஜனவரி, 2025

மாலுமி சொன்னான்
அதோ
இன்னதென்று கணிக்கவொண்ணா
தூரத்தில்
ஒளிர்கிறதே
அவ்வொளிதான்‌ இலக்கு
பழம் பாடகனின் கனவுதித்த
வரிகள் சொல்கிறது
ஒளி ஆயிரம் கடல்களுக்கு
அப்பாலுள்ளதென்று
வீரர்களே
நம் கைகள் சலியாது
துடுப்பிடட்டும்
நெடும்பயணமெங்கும்
உதடுகள் இசைக்கட்டும்
அகத்தின் ஏகாந்த கீதத்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?