Sunday, January 12, 2025

சுடலைப்பூ

பாட்டி உறுதியாய்ச்
சொல்லிவிட்டாள்
சுடுகாட்டுப்பக்கம்
கிடக்கும்‌ டிசம்பர் பூ பறிக்கச்
செல்லவே கூடாது என்று
பெரியாச்சிக்கோயிலில்
தீபம்‌ காட்டும்போதெல்லாம்
சன்னதமாடும் அக்கா
ஆனாலும் போனாள்
ஆலத்தின் வேர் கிடந்த
சுடலைச் சித்தன்
நெற்றியிலிட்டான்
மடியெல்லாம் மலர் பூக்க
நெற்றியில் சாம்பல் மலர
கள்ளமாய் இல்லம்சேர்ந்து
கட்டிச் சரமாக்கினாள்
சுடலைப்பூவை
இரவுக்குச் சூட்ட

No comments:

Post a Comment

கான் நின்ற மரமொன்று தூணாகி நிற்கும் முற்றத்தில் பல்லாங்குழியாடுகிறாய் வலையொளிக்க நீ இட்ட அரிசி உலை கொதிக்கிறது எத்தனை வளைக்கரம் வழி ...