ஞாயிறு, 12 ஜனவரி, 2025

கான் நின்ற
மரமொன்று
தூணாகி நிற்கும்
முற்றத்தில்
பல்லாங்குழியாடுகிறாய்
வலையொளிக்க நீ இட்ட
அரிசி
உலை கொதிக்கிறது
எத்தனை வளைக்கரம் வழி
வந்துள்ளது
இக்குழம்புமணம்
உத்தரத்தில் மோந்து
நிற்கிறது மரநாய்
சோழி ஒலிக்கிறது
மரக்குழியில்
பத்தாயத்தின் இருளுள்
கிடப்பவை எத்தனை தனிமையில்
கிடக்கின்றன
ஆழம் துழாவுவதற்குள்
உலைத்தட்டு சப்தமிடுகிறது
இல்லாத கொலுசின்
குதிகாலெலும்புச் சத்தத்தில்
ஏகாந்துள்ளது அகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?