ஞாயிறு, 12 ஜனவரி, 2025

கிளர்த்தும் வெளி

கையில் அரிவாள்
கொண்டு
நியாய அநியாங்களை
வெறித்து நோக்குகிறார்
விரபத்ரன்
தீயெழ நோக்கும்
லாடமுனியின் கை
அடிக்க ஓங்கியுள்ளது
மாடு மேய்க்க வந்த இடையன்
குழலூதும் காலத்தில்
கோபங்கள் என்ன செய்யும்
தேனடுக்கச் செல்பவனுள்
பறவைக் குரல்
கிளர்த்திய சிரிப்பை
ஏரியில் கிடக்கும்
வான் காண்கிறது
ஜாலங்களின் இசை
ஊடும்பாவுமாய்
விரவிக்கிடக்கும்
வெளி இது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?