Sunday, January 5, 2025

மரநிழல் அமர்ந்து
ஒரு காலைக்குள்
பெருகி வழியும்
மனிதர்களை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மர உச்சியில்
உணவு வேட்கும்
குஞ்சுப் பறவைகளின்
குரல் ஒலிக்கிறது
முந்திச் செல்லும்
வேகத்தில்தான் துவங்கிற்று
அல்லவா
தான் தான் என
எழுந்த ஒன்றில்தான்
துவங்கிற்று அல்லவா
மூன்றாம் முறையாக
சிவப்பு விழுகிறது
கோடி ஆண்டுகளாய்
ஜனிக்கும் இம்மரம் கண்டு
குறையா வேகம்
சிவப்பொளிக்கு
தேங்கும் ஆச்சர்யம்தான் என்ன

No comments:

Post a Comment

கான் நின்ற மரமொன்று தூணாகி நிற்கும் முற்றத்தில் பல்லாங்குழியாடுகிறாய் வலையொளிக்க நீ இட்ட அரிசி உலை கொதிக்கிறது எத்தனை வளைக்கரம் வழி ...