ஞாயிறு, 19 ஜனவரி, 2025

நீலம் போதுமானது
வானத்தை உருவாக்க
வெண்மை போதுமானது
மேகம் செய்ய
கருமை போதுமானது
இரவை கவியச் செய்ய
பச்சை நிறம் போதுமானது
வனத்திற்கு
எப்படியோ அருவியையும்
விழும்‌ நீரின் புகைப்பெருக்கையும்
பிறக்கச்செய்தேன்
கித்தானில்
நீ படைத்ததை
பார்த்துப் பார்த்து செய்கிறேன்
தூரத்து அந்தி வானில்
சிறு புள்ளை
ஒற்றைக் கரும் புள்ளியில்
சிறகடிக்கச் செய்தேன்
உன் அதிகாலைக் குருவிகளிடம்
என் அந்தியின் பறவை
ஒரு சொல்
பேசிவிடுமல்லவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?