நூறாவது வெற்றியை
அளித்தாய்
உலகுடனான என் பேரங்கள்
முடிவதேயில்லை
மேலும் மேலும்
எனும் புரவி பூட்டி
ஒரு பெரும் படையாய்
எங்களை நாங்களே
முந்திச்செல்கிறோம்
ஆசையின் குழம்படியதிர்வில்
உன் மலர்கள்
லேசாக நலுங்குகின்றன
மற்றபடிக்கு அவை
வானையே
பார்த்துள்ளன
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக