நண்பா
நான் மிகம்சோர்வுற்றிருக்கிறேன்
ஏதிந்தப் புலம்பலென
முகம்சுழிக்காதே
மோனம் என்னில்
நீடிப்பதில்லை
ஒரு கணம் இலகி நழுவி
ஒரு கணம் கிடந்து
பின் தான் தான்
எனக் கவிகிறது அகம்
இசைக்கு நொடிக்கணம் நீராகி
பின் திடப்பொருளாய் கிடக்கும்
அகத்தை தொட்டுப்பார்ர்கிறேன்
அந்தியின் பறவையொன்று
சிறகசைத்து சிறகசைத்து
பின் புள்ளியாய் நிலைத்து
கரைந்தழிகிறது நண்பா
வானம் அகத்தின் கதவுகளை
திறந்து பார்த்துவிட்டு
பின் இருக அடைத்துவிட்டுச்
சென்றுவிடும் இரவில்
நான் மிகவும்
சோர்வுற்றுள்ளேன்
என் நண்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக