லாயமெல்லாம்
வால்சுழற்றலும்பர்க்கடித்தலும்
நீரருந்தி
எழும் தாடையின்
நீர்வழிவுமான
ஒரு பகலில்
நாயொன்று முகர்ந்து வந்து
ஒவ்வொரு குதிரையாய்
கண்ணோட்டமிடுகிறது
இத்தனைக் குதிரை
எத்தனை தூரம்
எத்தனை வேகம்
ஓடும்?
தூரம் லாயத்துக்குள்
நிற்கிறது
வேகம் சலனமின்றிக்
கிடக்கிறது
அசையும் முன் அசைவு
என்னவாக உள்ளது?
No comments:
Post a Comment