வியாழன், 9 ஜனவரி, 2025

பெருங்கானகத்தின்
ஒரு விருட்சம்
முன் நிற்கிறேன்
எப்படிச் செய்தாய்
இத்தனை வளைவுகளை
வானம் வெகு தூரம்‌ இருப்பினும்
எங்ஙனம் தொட நீண்ட கைகளுடன்
முழு ஆசுவாசம் கொண்டது?
ஆழத்து வேர் நுனி
மண்ணை சுவாசிக்கிறதா?
தினம் வானேகும் புள்
எதைக் கொணர்கிறது?
இதோ இக்கணமும்
நான் எனதென்று
தனிப்பட்டுப்போகிறேன்
வண்டினம்‌ சேரா
புள் கீச்சரவமில்லா
என் விருட்சமொன்று.
மண்டியிடுகிறேன்
உடல் சுவர்
விழுந்துவிட்டால்
என் விருட்சம் உன் காடாகுமல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?