Thursday, January 9, 2025

கொல்லும் இரவு.
காதலின் உன்மத்ததில்
கிடக்கும்
ஏரி.
இத்தனை சலனமற்றதாக்கிய
காதல் எங்கே பிறந்தது?
உயிரின் ஆவி எழும்
நீர்வெளிக்குள்
குதித்தேன்
ஆழமெல்லாம் சலியத்
தேடியானபின்
ஏரிக்குமேல்
வானத்தில் ஒளிர்ந்தது
காதலின் மைய ஊற்று.
அதுதான் பெருக்கிற்று
கானகத்தின் இருள் உச்சாடனத்தை
நிலவின் செதில் ஒளிரும்
சர்ப்பங்களை பித்து கொள்ளச்
செய்தது அதுதான்.
மலர்கள் உடலோய்ந்துவிட்டன.
மானுடர் கனவுகளில்
எழுகிறது அதன்
ஓயா அழைப்பு.
கொல்லும் இரவிது.
மேலும் சலனமற்ற கனவினால்
துடிக்கின்றன உடல்கள்.

No comments:

Post a Comment

கான் நின்ற மரமொன்று தூணாகி நிற்கும் முற்றத்தில் பல்லாங்குழியாடுகிறாய் வலையொளிக்க நீ இட்ட அரிசி உலை கொதிக்கிறது எத்தனை வளைக்கரம் வழி ...