புதன், 8 ஜனவரி, 2025

அந்தி இரவுக்குள்
மெல்ல நகர்கிறது
சருகு பற்றி
எரியும் கனலின்
நடனம்
வானுடன் எதை பேசுகிறது?
இக்கனல்தான்
என் குருவிகளை அச்சுறுத்தியது
வனம் பற்றி எரிவதான
கொடும் கனவுக்குள்
தள்ளியது
அழிப்பதான தன்
இயல்பை சிறு சந்தேகமுமின்று
அதன் வெடிப்பொலி
சொல்லிக்கொண்டிருக்கிறது
ஆதிக்கனலொன்று தன்னென்றாகித்தான்
பெருகியது இதுவெல்லாம்
மேலும் கனலில்
மலரேதும் மலர்வதில்லை
அல்லவா?
அணைத்துவிடுவதுதான் வழி
மலரெழாமல் சுடர் எரிந்து
ஏது பயன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...