காத்திருப்பதைத்
தவிர ஒன்றும்செய்வதற்கில்லை
இச்சிறு காலத்தில்தான்
நிகழ்ந்துவிட்டது
சில வெற்றிகள்
சில தோல்விகள்
கொஞ்சம் நிறைவுகள்
பெரிதும் நிறையாமைகள்
தடமெல்லாம் மலர்பூத்து
பின் நிலமெல்லாம் இருள்சொரிந்த
பொழுதுகள்
சுழட்ட சுழட்ட
உள்ளிருந்து புறமிருந்து
சுழட்டச் சுழட்ட சுழல்கிறேன்
நீண்டு நீண்டு செல்லும்
காத்திருப்பின்
இச்சிறுகாலத்தில்
No comments:
Post a Comment