எல்லாரிடமும்
கேட்டாயிற்றுபெருவெடிப்பைபோல்
நிகழ்வதாம்
தாகத்தைக்கூட நாம்
உருவாக்கிகொள்ள
முடியாதாம்
இனி ஒரு சொல்லும்
வேண்டாம்
ஒலியற்ற ஆழம் சென்று
படைத்ததிடம்
கேட்கப்போகிறேன்
ஏன் என்று?
பெருவெடிப்பைப்போல்
இது ஒரு
சிறுவெடிப்பென்றால்?
வெடித்துச் சிதறியவற்றை
ஒருக்கி ஒன்றாக்கினால்
என்ன வரும்?
லயத்திற்கு முன்னான
லயம்தான் எப்படியானது?
No comments:
Post a Comment