பறவைகள் எழவில்லை
வனத்தின் மீது கவிந்திருக்கும்
மூடுபனியின் கதவுகளை
மெல்லத் தட்டுகிறேன்
காலை மெல்லக் கலைகிறது
ஈரம் உரைந்து கிடக்கும்
இலையில்
வெளியின் நீள நீளமான நாளங்களில்
ஓடிவந்த
மஞ்சளின் ஆன்மம் மெல்ல
வண்ணமிடுகிறது
இம்மாபெரும் வனத்தை
அசைக்கப்போகும் முதல் புள்ளே
நீ வாழும் தொன்மையான விருட்சத்தின் கீழ்
காத்துள்ளேன்
காலமும் வெளியும்
உன் வழி அருளும்
முதல் சொல்லை வேண்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக