ஞாயிறு, 12 ஜனவரி, 2025

கரம்

ஒற்றைக்கால்தூக்கி
அடுத்த அடியை
உசாவுகிறது
சேவல்
கன்று தவிக்கிறது
மடி முட்டி நாளெமெல்லாம்
பால் பெருக்க
வைகோலில் சரசரப்பாய்
கிடக்கும் பாம்பைக்
கண்டு சிரித்துக்கூவுகிறான்
வாண்டுப்பயல்
கொல்லைப்புறமிருந்து
வாசல் வரை வந்தாகவேண்டும்
உன் கொலுசொலியை
அன்னையின் சிணுங்கலாய்
அறிந்துள்ள
நாய்க்குட்டி
கருணை வேட்கிறது
கயிற்றை அவிழ்ப்பதற்குள்
அத்தனை முறை நக்கிற்று
கன்று
அகம் பெருக்கும்
கரங்களை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?