கானுறை புள்குரல்
உடைத்து விட்டதுஏக்கத்தின் மதகினை
சர்ப்பமும் மலரும் அலைநெளியும்
உன் வெளிக்குள்
நிற்கிறேன்
இவ்வுடல் பாரம்
இவ்வுடல் பாரம்
பிரிவு செய்தது இத்தனை
கனத்தை
உன் கோடி மலரில்
ஒன்றுதிர்ந்தால்
தீர்ந்து போகும்
வெறும் தாகமாய் நிற்கும்
இவ்வாழ்வு
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக