நிறையவே கணக்குகள்
நிறைத்துவிட்டன
அவற்றின் நிறப்புகையினாலான
வெளிக்குள் சஞ்சரிக்கிறேன்
நூறாவது முறையாக
வாழ்வை பரிசாக்கி
நீட்டுகீறாய்
ஆயிரம் பரிசுகள் வேண்டும்
உணர்ந்துவிடக்கூடும்
எளிய கணங்களில்
வழிதோடுவது
வாழ்க்கையென்று
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக