சனி, 13 நவம்பர், 2021

 ஒரு கணத்தை
என்ன செய்வது
இக்கணத்தை என்ன
செய்வது
ஒரு மலையின் விரிவுடன்
ஒரு மழைத்துளியின்
எளிய கணத்துடன்
ஒரு துளி ஒளியெனத்
தலும்பும்
ஒரு பெரும் எழும்பி
நிற்கும்‌அலையென
ஒரு மழைமேகக் கூட்டமென
மேல் கவிழும்
இக்கணத்தை
என்ன செய்ய?
ஒரு மலரை சூடிக்
காட்டுகிறாய்
அப்படியே இக்கணத்தையும்
எக்கணத்தையும்
ஒரு மலராக்கி சூட்டுவதன்
சூட்டிக்கொள்வதன்
எளிய சூட்சுமத்தையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முட்கள் இதென்றும் மலர்கள்‌ இதென்றும் விதையில் எங்ஙனம் வகுத்துள்ளாய்?