மரங்களை வேரிழுத்து
விழுங்கும்நெடுஞ்சாலையில்
அதிவேக
வாகனங்களை
மட்டுப்படுத்தி
குறுக்காக
கடக்கிறது
எருதுகளின் நிரை
கருஞ்சாலையில்
பசுமையாய் சாணம்
ஒரு நிமிட
அமைதிக்குப்பின்
முழங்கிற்று
சாலை பெருந்தூரமாய்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக