உலகம் யாவும்
ஆழ்ந்தடங்கி உறங்குகையில்வானம் விழித்துக்கொண்டது
மின்னல் துடித்து விழ
கண்டது விண்
மண் பேருயிரை
சிறு துகலெனக் கிடந்த
கண் வழி அறிந்தது
மண்
விண் எனும் விரிவை
மாமழை வந்தும்
அலையும் காற்றுக்கும்
உயிர் எரிகிறது
பெருமரமொன்றின்
வேரணைப்பில்
சிறு சுடர்
No comments:
Post a Comment