"திருமணம் பற்றி"
பின் அல்மித்ரா பேசினான், குருவே திருணம் பற்றி?
அவர் பதிலலித்தார்:
நீங்கள் ஒன்றாகவே பிறந்தீர்கள், நீங்கள் மேலும் மேலும் ஒன்றாகவே இருங்கள்.
மரணத்தின் வெண்மையான சிறகுகள் உங்கள் நாட்களை சிதறடிக்கையிலும் ஒன்றாகவே இருங்கள்.
ஆம், கடவுளின் மௌனமான நினைவிலும் ஒன்றாகவே இருபீர்களாகுக.
ஆனால் உங்களிடையே இடைவெளி இருக்கட்டும்.
அதனில் சுவர்க்கத்தின் காற்று நடனம் புரியட்டும்.
ஒருவரை ஒருவர் காதலியுங்கள், காதலால் ஒருவரை ஒருவர் பிணைத்துக்கொள்ளாதீர்கள்:
உங்கள் ஆன்மாவின் கரைகளினிடையே அசையும் கடல் இருக்கட்டும்.
ஒருவரின் கோப்பையை மற்றோருவர் நிரப்புங்கள் ஆனால் ஒரு கோப்பையில் அருந்தாதீர்கள்.
உங்கள் பண்டங்களை ஒருவருக்கொருவர் கொடுங்கள், ஆனால் உண்ணாதிருங்கள் ஒரே பண்டத்தை.
ஒன்றாக ஆடுங்கள் பாடுங்கள் மகிழ்ந்திருங்கள், ஆனால் விடுங்கள் ஒருவரை ஒருவர் தனிமையிலும்.
கிட்டாரின் தந்திகள் தனித்திருந்தாலும் அவை ஒரே இசையில் அதிர்கின்றன.
உங்கள் இதயத்தை கொடுங்கள், மற்றவர் பிணைத்துவைப்பதற்காக அல்ல.
ஏனெனில் வாழ்வின் கரங்கள் மட்டுமே உங்கள் இதயங்களை ஏந்தலாம்.
ஒன்றாக நில்லுங்கள், ஆனால் ரொம்பவும் நெருக்கமாக அல்ல.
ஏனெனில் கோபுரங்கள் தனித்தனியாகவே நிற்கின்றன,
மேலும் பெருவிருட்சங்கள் ஒன்றன் நிழலில் மற்றொன்று வளர்வதில்லை.

No comments:
Post a Comment