பெரும் சதுப்பு
அசைவறுத்த முதலைஅசைவில்லாத பறவை
அசைவற்ற
நீரில் மிதக்கும்
அசைவேதுமற்ற
சிறு பூச்சி
சதுப்பின் ரீங்காரம்
ஊன்றிய கால் வழி
கொடிபோல்
மேலெல்லாம் படர்கையில்
கண்டேன்
அது
பெரும்
அசைவின்மையில்
அசைவு கொள்வதை
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக