செவ்வாய், 2 ஜூன், 2026

பிறப்பறு - 2

மலரினும் மெல்லிய
காமமுள்ளது

உவப்பக் கூடி
உள்ளப்பிரியும்
நட்புள்ளது

குழலினும்
யாழினும்
இனிய குரலொன்றுள்ளது

எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் இறைவா
எனும் அரற்றலுள்ளது

சாம்பல் பூசி
மயானம் வாழ் இறைவா?
இப்படியான‌ பிறப்பைத்தான்
அறுக்கிறீரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...