புதன், 14 மே, 2025

அதிகாலைப்
பறவைக்குரலை
அருந்தினேன்
உடலின் விருட்சங்களெல்லாம்
சிலிர்த்துக்கொண்டன
கதிர் உஷ்னமின்றி
கிடக்கும்போது
கிளம்பிவிட்டேன்
என் வயல்களுக்கு
நீ ஏகாந்தமாய் கிடப்பதைக்
காண

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?