அன்பைக் குறிக்க
ஆயிரம் சொற்களிருந்தும்இனி அவை வேண்டாம்
எண்கள்
எண்கள்
சந்தேகமற்றவை
பசப்பிலாதவை
பொருளின் எடையை
நீரின் அளவை
தூரத்தை
காலத்தை
விசையை
வேகத்தை
மின்சாரத்தை
பொருளின் மதிப்பை
நிலத்தை
மழையை
அண்டங்களுக்கிடையான
தூரத்தை
அளந்துவிடும் எண்
அன்பினை அளந்துவிடாதா
இத்தனை மில்லி
அன்புக்கு
அதே அளவு
அளந்து கொடு போதும்
எண்கள்
எப்படியாவது
சிக்கல்களை எல்லாம்
தீர்த்துவிடும்
நம் சிக்கல்கள எல்லாம்
அன்புச்சிக்கல்கள்தானே
No comments:
Post a Comment