திங்கள், 29 டிசம்பர், 2025

உன்னை சுட்டும் சொல்

 என்னால் வேறேதும்
செய்ய முடியாது
சொல்லை அடுக்குகிறேன்
சொல்லை கோர்க்கிறேன்
சொல்லை சரமாக்குகிறேன்
சொல் சுட்டும் திசையில்
ஓடிச்சென்று திரும்புகிறேன்
வானம் ஒரு சொல்
கானகம் ஒரு சொல்
மழையும் மலையும்  ஒரு சொல்
சொல்லாகாத ஏதுமில்லை மண்ணில்
தொன்மையான சொல்லொன்று 
குழைந்து வளைந்து
சொடுக்கி வெடித்து மறைந்தபின்
நீ எதிரொலிக்கிறாய் அகத்தில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...